Good website for Athichudi
http://www.aramseyavirumbu.com/
|| அ|| அறம் செய விரும்பு || Desire doing righteous deeds
|| ஆ||ஆறுவது சினம் ||Calm your anger
||இ||இயல்வது கரவேல் ||Help others in whatever ways you can
||ஈ||ஈவது விலக்கேல் ||Never stop others from providing charity
||உ||உடையது விளம்பேல் ||Never proclaim/boast about what you have
||ஊ||ஊக்கமது கைவிடேல் ||Never give up hope/motivation
||எ||எண் எழுத்து இகழேல் ||Don't despise learning
||ஏ||ஏற்பது இகழ்ச்சி ||Accepting alms (begging) is despicable
||ஐ||ஐயமிட்டு உண் ||Share food with the needy before you eat
||ஒ||ஒப்புர வொழுகு ||Act virtuously
||ஓ||ஓதுவது ஒழியேல் || Never give up learning
||ஒள||ஒளவியம் பேசேல் || Never talk jealous words
||ஃ||அஃகஞ் சுருக்கேல்|| Never cheat on selling grains (Food)
http://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
- ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய
தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.
உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
-
- நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்
2. ஆறுவது சினம்
-
- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
-
- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
-
- ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
-
- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
-
- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
-
- எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
-
- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
-
- யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
-
- நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
-
- ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
-
- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
உயிர்மெய் வருக்கம்
14.கண்டொன்று சொல்லேல்.-
- கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
-
- 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
- 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
- சனி(குளிர்ந்த) நீராடு.
-
- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
-
- உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
-
- ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
-
- உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
-
- ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
-
- எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
-
- பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
- நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
-
- நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
-
- பாம்புகளை பிடித்து விளையாடாதே.
-
- 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
-
- கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
-
- இழிவான செயல்களை செய்யாதே
-
- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.
-
- தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
-
- மிகுதியாக தூங்காதே
ககர வருக்கம்
32.கடிவது மற-
- யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
-
- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
- பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
-
- உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
-
- இழிவான குணஞ் செயல்களை நீக்கு
-
- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
-
- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
-
- பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
-
- கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
-
- உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
-
- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
-
- குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
-
- வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்-
- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
-
- அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
-
- பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
-
- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
-
- கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
-
- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
-
- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
-
- நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
-
- பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
-
- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
-
- முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
தகர வருக்கம்
55. தக்கோ னெனத்திரி-
- பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
-
- யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
-
- நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
-
- பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
-
- முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
-
- ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
-
- கடவுளை பழிக்காதே.
-
- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
-
- மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
-
- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
-
- ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி-
- நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
-
- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
-
- உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
-
- வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே
-
- நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
-
- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
-
- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
-
- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
-
- பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
-
- பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
-
- மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்-
- பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
-
- பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
-
- குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
-
- பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
-
- உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
-
- விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
-
- அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
-
- அறியாமையைப் போக்கு
-
- அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
-
- பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
-
- யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
மகர வருக்கம்
88. மனந்தடு மாறேல்-
- எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
-
- பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
-
- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
-
- மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
-
- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
-
- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
-
- பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
-
- நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
-
- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
-
- சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
-
- நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்-
- உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
-
- பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
-
- கல்வியாகிய நற்பொருளை விரும்பு
-
- முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
-
- உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
-
- ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
-
- யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
-
- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
-
- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
-
- பகைவர்களை நம்பாதே
-
- எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.